மேலும் செய்திகள்
டெங்கு விழிப்புணர்வு
2 hour(s) ago
மீன் வலையில் சிக்கிய பெலிக்கான் பறவை மீட்பு
2 hour(s) ago
அடிப்படை மொழியறிவு கணிதத்திறன் போட்டி
3 hour(s) ago
பணி வழங்க கோரி நகராட்சி முற்றுகை
3 hour(s) ago
புதுச்சேரி : மின்கட்டண உயர்வு குறித்த பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் பி.எம்.எஸ்.எஸ்.எஸ்., அரங்கில் நேற்று நடந்தது.மின் கட்டணத்தை உயர்த்த அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கூட்டத்தில் கூச்சல் குழப்பம் நிலவியது.முன்னாள் எம்.எல்.ஏ., வையாபுரி மணிகண்டன்:மின்துறையை தனியார்மயமாக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.கோர்ட்டில் வழக்கு இருப்பதால்தான் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மின் கட்டணத்தை யாருக்காக உயர்த்துகிறீர்கள். தனியார் பயன்பெறுவதற்காக அரசு வேலை செய்ய வேண்டுமா?இந்திய கம்யூ., கட்சி மாநில செயலாளர் சலீம்:ஒரே ஆண்டில் மின் கட்டணம் 3 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இணை மின்சார ஒழுங்கு முறை ஆணையம் மக்களின் கோரிக்கைகளை காது கொடுத்து கேட்காமல் கட்டணத்தை உயர்த்த அனுமதி அளிக்கிறது. மின்சாரத்துக்கு மானியத்தை வழங்க அரசுக்கு ஆணையம் பரிந்துரை செய்ய வேண்டும்.மா.கம்யூ., மாநில செயற்குழு உறுப்பினர் பெருமாள்:மின்சார கொள்முதலுக்கும், விற்பனைக்கும் உள்ள இடைவெளி ரூ.177 கோடியாக சொல்லப்பட்டுள்ளது. தவறான மதிப்பீடுகளை கொடுத்துள்ளனர். மின்துறை ஊழியர்களின் சம்பளம் பற்றி மதிப்பீடு அதிகமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கணக்கை சரி செய்தால் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய தேவை இருக்காது.தொடர்ந்து, பொதுமக்கள் மீதான மின் கட்டண உயர்வை கைவிட வேண்டும் என அனைவரும் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்தனர்.இதற்கு பதிலளித்து மின்துறை கண்காணிப்பு பொறியாளர் சண்முகம் பேசும்போது, 'அரசு துறைகள் ரூ.300 கோடியும், நுகர்வோர் ரூ.200 கோடியும் மின் கட்டணம் பாக்கி வைத்துள்ளனர்.அந்த கட்டண பாக்கிக்கும், மின் கட்டண உயர்வுக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. மின் பாக்கியால் அரசுக்குதான் இழப்பு. இந்த இழப்பை மக்கள் தலையில் சுமத்துவதில்லை' என்றார்.
2 hour(s) ago
2 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago