| ADDED : பிப் 06, 2024 06:05 AM
புதுச்சேரி லோக்சபா தேர்தலையொட்டி புதுச்சேரி காவல் துறை,வருவாய் என பல்வேறு துறைகளில் 3 ஆண்டுகள் கடந்து பணியாற்றும் அதிகாரிகள் தொடர்ந்து இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.அதன்படி,தற்போது மூன்று பி.சி.எஸ்.,அதிகாரிகள் கூடுதல் பொறுப்புடன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.நிதித் துறை துணை செயலர் ரத்னாகோஷ் கிேஷாருக்கு,வணிக வரி இணை ஆணையராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மாகி மண்டல நிர்வாகி சிவராஜ் மீனா, ஐ.டி., துறை செயலராகவும்,திட்ட அமலாக்க முகமை கூடுதல் பொறுப்பாகவும் வழங்கப்பட்டுள்ளது.ஐ.டி.,துறை இயக்குனர் மோகன்குமார், மாகி மண்டல நிர்வாகியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.இதற்கான உத்தரவை நிர்வாக சீர்த்திருத்த துறை சார்பு செயலர் ஜெய்சங்கர் பிறப்பித்துள்ளார்.