உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இந்திராநகர் பள்ளியில் என்.எஸ்.எஸ்., துவக்கம்

இந்திராநகர் பள்ளியில் என்.எஸ்.எஸ்., துவக்கம்

புதுச்சேரி : இந்திரா நகர், இந்திராகாந்தி அரசு மேல்நிலைப் பள்ளியில் என்.எஸ்.எஸ்., முதலாண்டு மாணவ மாணவிகளுக்கான துவக்க விழா நேற்றுமுன்தினம் நடந்தது.மாணவர் சரவணன் வரவேற்றார். திட்ட அலுவலர் சேகர் தலைமை தாங்கினார். என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் பூபதி விழாவினைத் துவக்கி வைத்தார். பள்ளி முதல்வர் மொகிந்தர்பால், துணை முதல்வர் சுப்பராயன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.தலைமை போக்குவரத்து வார்டன் பாலகிருஷ்ணன், போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விளக்கம் அளித்தார். மாணவி மோனிஷா நன்றி கூறினார்.வேளாங்கண்ணி பள்ளி: ரெட்டியார்பாளையம் வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 வகுப்புகளுக்கான என்.எஸ்.எஸ்., துவக்க விழா நடந்தது.துணை முதல்வர் விஜயன் வரவேற்றார். நிர்வாக உறுப்பினர் ஜெயராஜ் முன்னிலை வகித்தார். பள்ளி இயக்குனர் ஜோதிதாசன் சிறப்புரையாற்றினார். தாகூர் கலைக் கல்லூரி ஓய்வு பெற்ற சமூகவியல் துறை பேராசிரியர் மார்ட்டின் செல்வராஜ் என்.எஸ்.எஸ்., பயிற்சி வகுப்பைத் துவக்கி வைத்தார். மாணவி நிஷாந்தினி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் காசிலிங்கம் செய்திருந்தார்.திட்ட அலுவலர் வீரமுத்து நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை