உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கவர்னர் பாரூக்கிற்கு ரங்கசாமி வாழ்த்து

கவர்னர் பாரூக்கிற்கு ரங்கசாமி வாழ்த்து

புதுச்சேரி : பிறந்த நாள் கொண்டாடிய கவர்னர் பாரூக்கிற்கு முதல்வர் ரங்கசாமி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். ஜார்க்கண்ட் கவர்னராக இருந்த பாரூக், கேரள கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நாளை திருவனந்தபுரத்தில் பதவியேற்றுக் கொள்கிறார்.இதற்கிடையில் கவர்னர் பாரூக் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். முதல்வர் ரங்கசாமி, சட்டசபை எதிர்க் கட்சித் தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் ராமச்சந்திரன், தி.மு.க., அமைப்பாளர் ஜானகிராமன், லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர்கள் ஜோசப் மரியதாஸ், கந்தசாமி, காங்., தலைவர் ஏ.வி. சுப்ரமணியன் மற்றும் முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் உட்பட பலர் நேரில் சென்று பாரூக்கிற்கு வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை