உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / "புதிய மருந்துகள் கண்டுபிடித்து மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்

"புதிய மருந்துகள் கண்டுபிடித்து மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்

புதுச்சேரி:பயோ இன்பர்மேட்டிக்ஸ் உதவியுடன் மருந்துகள் கண்டுபிடித்து மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என பல்கலைக்கழக இயக்குனர் ராமதாஸ் பேசினார்.புதுச்சேரி பல்கலைக்கழக கணித துறை கருத்தரங்க அறையில் மரபியல் ஆராய்ச்சிகள் குறித்த மூன்று நாள் தேசிய கருத்தரங்க துவக்க விழா நேற்று நடந்தது.பயோ இன்பர்மேட்டிக்ஸ் துறை தலைவர் திவாரி வரவேற்றார். கருத்தரங்கை டீன் பிரியா தேவிதர் துவக்கி வைத்தார்.பல்கலைக்கழக இயக்குனர் ராமதாஸ் சிறப்புரையாற்றி பேசுகையில் 'நாட்டில் பசுமை புரட்சியை செயல்படுத்தியதால் பஞ்சம் மறைந்து உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றோம். நாடு இரண்டாம் பசுமை புரட்சியை நோக்கி தற்போது சென்று கொண்டு இருக்கிறது. இந்நேரத்தில் நம் நாட்டில் நிறைய நோய்கள் வருகின்றன. இதற்கான மருத்தினை பயோ இன்பர்மேட்டிக்ஸ் உதவியுடன் கண்டுபிடித்து மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்' எனக் குறிப்பிட்டார்.நிகழ்ச்சியில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் தர்மலிங்கம், ஐதராபாத் பேராசிரியர் சேகர் மிண்டே, சென்னை பல்கலைக்கழக பேராசிரியர் குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். லட்சுமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை