உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆறுபடை வீடு மருத்துவ கல்லுாரியில் பொங்கல் விழா 

ஆறுபடை வீடு மருத்துவ கல்லுாரியில் பொங்கல் விழா 

பாகூர், : கிருமாம்பாக்கம் ஆறுபடை வீடு மருத்துவக் கல்லுாரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. திருக்குறள் செம்மல் மணிமொழியனார் முத் தமிழ் ஆலயம் மற்றும் மாணவர் சங்கம் சார்பில் நடந்த விழாவில், கல்லுாரியின் தமிழ் மன்ற தலைவர் கோபிநாத் வரவேற்றார். டீன் ராஜேஷ் கெய்ல் வாழ்த்தி பேசினார். முன்னதாக விநாயகர் பூஜை நடந்தது.தொடர்ந்து, மாணவர்கள், பேராசிரியர், ஊழியர்கள் இணைந்து கல்லுாரியின் முன் கரும்பு பந்தல், மஞ்சல் தோரணம் கட்டி மண் பானையில் பொங்கல் வைத்து வழிபட்டனர். விழாவையொட்டி, மாணவர்களின் பட்டிமன்றம், விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சி நடந்தது.அனைவரும் மாட்டு வண்டியில் கல்லுாரி வளாகத்தை வலம் வந்து கொண்டாடினர்.விழாவில், உயர்கல்வி பிரிவு டீன் மகாலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கல்லுாரி துணை பதிவாளர் பெருமாள் தலைமையில் மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர். தமிழ் மன்ற உறுப்பினர் செயலர் விக்னேஷ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்