உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மூலநாதர் சுவாமி கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு

மூலநாதர் சுவாமி கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு

பாகூர் : பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது. பாகூரில் வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், நேற்று பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதனையோட்டி, காலை 9:00 மணிக்கு வேதாம்பிகையம்மன், மூலநாதர், பால விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், மாலை பிரதோஷ வழிபாடு நடந்தது. கோவில் கொடிமரம் எதிரே, வடக்கு திசை நோக்கி செவி சாய்த்து அருள் பாலிக்கும் செல்வநந்தி பெருமானுக்கு பால், தயிர், தேன், சந்தனம் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்து, மகா தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை