உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / லாஸ்பேட்டை அசோக் நகரில் கோலப்போட்டி பரிசளிப்பு விழா

லாஸ்பேட்டை அசோக் நகரில் கோலப்போட்டி பரிசளிப்பு விழா

புதுச்சேரி : உழவர்கரை மாவட்ட பா.ஜ., சார்பில் நடந்த கோலப்போட்டியில், வெற்றி பெற்ற பெண்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.பொங்கலை முன்னிட்டு, உழவர்கரைமாவட்ட பா.ஜ., சார்பில், லாஸ்பேட்டை தொகுதியில் உள்ள அசோக் நகரில் கோலப்போட்டி மற்றும் பரிசளிப்பு விழா நடந்தது.விழாவுக்கு மாநில பா.ஜ., தலைவர் செல்வகணபதி எம்.பி., தலைமை தாங்கினார். உழவர்கரை மாவட்ட பா.ஜ., தலைவர் தண்டபாணி முன்னிலை வகித்தார். கோலப்போட்டியில் 700க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பொதுச் செயலாளர் மோகன் குமார், மவுலி தேவன், மாவட்ட பொறுப்பாளர்கள் சரவணகுமார், 'செல்வாஸ்' அசோகன், மாவட்ட பொதுச் செயலாளர்கள் பிரகாஷ் மற்றும் சுரேஷ் கண்ணா கலந்து கொண்டனர்.விழா ஏற்பாடுகளை, அசோக் நகர் பூத் நிர்வாகிகள் சோமசுந்தரம், வேலு, ரமேஷ், துரை, வேல்முருகன், வெங்கட்ரமணி, வசந்தி மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை