உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  சைபர் கிரைம் போலீஸ் நிலையம் முன் போராட்டம் : நாராயணசாமி

 சைபர் கிரைம் போலீஸ் நிலையம் முன் போராட்டம் : நாராயணசாமி

புதுச்சேரி: புதுச்சேரியில் தேர்தல் சமயத்தில் ஆதார் அட்டை கேட்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தவில்லை எனில் போராட்டம் நடத்தப்படும் என, முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார். அவர், கூறியதாவது: சைபர் கிரைமில் இருப்பவர்களுக்கு தனிப்பட்ட பயிற்சி வேண்டும். முத்தியால்பேட்டை உள்ளிட்ட தொகுதிகளில் சைபர் குற்றம் நடக்கிறது. இதற்கு பின்னணியில் யார் உள்ளார். இதனை சைபர் கிரைம் விசாரிக்க வேண்டும். ஆதார் அட்டையை தேர்தல் சமயத்தில் கேட்க வேண்டிய காரணம் என்ன. இது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தவில்லை என்றால் சைபர் கிரைம் காவல் நிலையம் முன், போராட்டம் நடத்தப்படும். இதில் கவர்னர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரியில் காங்., கூட்டணியில் உள்ள தி.மு.க., வரும் தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது குறித்த கேள்விக்கு, '2026-ம் ஆண்டு தேர்தலில் காங்., 26 தொகுதிகளில் போட்டியிடும்' என்றார். வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முத்தியால்பேட்டை தொகுதி பொறுப்பாளர் ஈரம் ராஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை