மேலும் செய்திகள்
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
3 hour(s) ago | 1
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
5 hour(s) ago | 1
புதுச்சேரி : பார்வர்டு பிளாக் கட்சியின் மாநிலக் குழு கூட்டம் லெபூர்தொனே வீதியில் நடந்தது. மாநில செயற்குழு உறுப் பினர் முகமது பிலால் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் முத்து இன்றைய பிரச்னைகள் மற்றும் மத்தியக் குழு முடிவு கள் குறித்து விளக்கினார். துணைச் செயலாளர் தர்மராஜன், குழு உறுப்பினர் ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், கட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் நில வணிகத்தில் ஈடுபடக் கூடாது. மதுக்கடைகளில் வேலை செய்யக் கூடாது, உறுப்பினர் சேர்க்கை, தொழிற்சங்கம் உருவாக்குதல் போன்ற கட்சி முன்னேற்றப் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். ஊழலை ஒழிக்கவும், லோக்பால் மசோதாவில் பிரதமரைக் கொண்டு வரக் கோரி நாடு தழுவிய யாத்திரையில் மாநில நிர்வாகிகள் பங்கேற்பது, பஞ்சாயத்து தேர்தலை நடத்த அரசை வலியுறுத்துவது, இளைஞர் நலக் கொள்கையை உருவாக்கி புதிய தொழிற்சாலைகளைக் கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
3 hour(s) ago | 1
5 hour(s) ago | 1