உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தாழ்த்தப்பட்டோர் சிறப்புக் கூறு நிதி வெள்ளை அறிக்கை கோரி ஆர்ப்பாட்டம்

தாழ்த்தப்பட்டோர் சிறப்புக் கூறு நிதி வெள்ளை அறிக்கை கோரி ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி : தாழ்த்தப்பட்ட மக்களுக்கான சிறப்புக் கூறு நிதி, கடந்த 10 ஆண்டுகளில் பயன்படுத்தப்பட் டது குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடக் கோரி, ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப் பட்டுள்ளது. தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப் பாளர் ராமசாமி நிருபர்களிடம் கூறியதாவது: புதுச்சேரி தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில், பட்டியலின துணைத் திட்ட கோரிக்கை சாசன ஆய்வரங்கம், வரும் 7ம் தேதி அரசு ஊழியர் சம்மேளன அலுவலகத்தில் நடக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கான சிறப்புக் கூறு நிதியை, வேறு திட்டங்களுக்கு மாற்றக் கூடாது. கடந்த கல்வியாண்டுக்கான உதவித் தொகை, வீடு கட்டும் மான்யம், பழைய தொகுப்பு வீடுகளை புனரமைப்பது உள்ளிட்ட தாழ்த்தப் பட்ட மக்களுக்கான திட்டங்களை தடையின்றி செயல் படுத்த வேண்டும்.கடந்த 10 ஆண்டுகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான சிறப்புக் கூறு திட்ட நிதி அமலாக்கம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் இன்று 3ம் தேதி ஆதி திராவிடர் நலத்துறை அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை