உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இலவச கராத்தே பயிற்சி

இலவச கராத்தே பயிற்சி

புதுச்சேரி : புதுச்சேரி மாநில ஒருங்கிணைந்த கராத்தே சங்கம், மாநில என்.ஆர். விளையாட்டு வீரர்கள் நலச் சங்கம் சார்பில் முதல்வர் ரங்கசாமி பிறந்த நாளையொட்டி இலவச கராத்தே பயிற்சி முகாம் நடந்தது. சண்முகாபுரம் தமிழ் திருமண மண்டபத்தில் நடந்த பயிற்சி வகுப்பிற்கு சங்கத் தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். வளவன் வரவேற்றார். ராஜா, பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தனர். உழவர்கரை நகராட்சி முன்னாள் சேர்மன் ஜெயபால், முன்னாள் கவுன்சிலர் மாரிமுத்து சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். முகாமில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு கராத்தே, பெரம்பூ, அகிடோ, தேக்வாண்டோ குறித்து கட்டா மற்றும் ஷியாய் பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி