உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இந்திய கம்யூ., சார்பில் தெருமுனை பிரசாரம்

இந்திய கம்யூ., சார்பில் தெருமுனை பிரசாரம்

புதுச்சேரி : லாஸ்பேட்டையில் நீண்ட காலமாக மக்கள் பயன்படுத்தி வரும் இடத்தில் குடியிருப்பு கட்டும் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி, தெருமுனை பிரசாரம் நடந்தது. இந்திய கம்யூ., கட்சியின் லாஸ்பேட்டை, காலாப்பட்டு தொகுதிக் குழு சார்பில், லாஸ்பேட்டை அய்யனார் கோவில் சந்திப்பு அருகில் நடந்த தெருமுனை பிரசாரத்தை, கட்சியின் செயலாளர் நாரா கலைநாதன் துவக்கி வைத்தார். செயற்குழு உறுப்பினர் சேதுசெல்வம், நிர்வாகக் குழு ஆனந்து, தொகுதி செயலாளர் சுப்பையா, தட்டாஞ்சாவடி தொகுதி செயலாளர் முருகன், மாநிலக் குழு உறுப்பினர் துரைசெல்வம், கலியபெருமாள், அப்துல், பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பிரசாரத்தின்போது, லாஸ்பேட்டை ஹெலிபேட் அருகில் உள்ள காலியிடத்தை, அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்ளவும், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் விளையாட்டு மைதானமாகவும் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது இந்த இடத்தில், பொதுப்பணித் துறை மூலம் நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் கட்ட அரசு திட்டமிட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் பொதுநோக்கில் பயன்படுத்தி வரும் இடத்தில் குடியிருப்புக் கட்டும் திட்டத்தைக் கைவிட்டு, வேறு பொருத்தமான இடத்தில் நீதிபதிகளுக்கான குடியிருப்புகளைக் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்