உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பணி நிரந்தரம் கோரி உண்ணாவிரதம்

பணி நிரந்தரம் கோரி உண்ணாவிரதம்

புதுச்சேரி : பகுதி நேர ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடந்தது. பணியின் போது இறந்தவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வழங்கப்பட்ட பகுதிநேர ஊழியர் பணியிடங்களை நிரந்தரம் செய்ய வேண்டும். துப்புரவு ஊழியர்களுக்கு இலவச வீடு கட்டும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அவர்களுக்கு மூன்று கட்ட பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை உள்ளாட்சித்துறை அலுவலகம் எதிரில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. புதுச்சேரி நகராட்சி சுகாதார ஊழியர்கள் சங்கம், அரசு ஊழியர்கள் ஐக்கிய பேரவை சார்பில் நடந்த போராட்டத்திற்கு ஆரோக்கியநாதன் தலைமை தாங்கினார். கோரிக்கைகள் குறித்து ஐக்கிய பேரவையின் மாநில செயலாளர் எழில் பேசினார். போராட்டத்தில் நிர்வாகிகள் வீரமணி, குருநாதன், ஆனந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை