| ADDED : மார் 16, 2024 11:14 PM
புதுச்சேரியில் இருந்து 766 கி.மீ., துாரத்தில் உள்ள ஹைதராபாத்திற்கு, தினசரி விமான சேவை உள்ளது. தினசரி 5:10 மணிக்கு புறப்படும் விமானம், 6:35 மணிக்கு ஹைதராபாத் செல்கிறது. தற்போது ரயில் பாதை மூலம் புதுச்சேரி - ஹைதராபாத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.ஹைதராபாத்தில் இருந்து 3 கி.மீ., துாரத்தில் உள்ள கச்சிகுடா ரயில் நிலையத்தில் இருந்து செங்கல்பட்டு வரை இயங்கி வந்த கச்சிக்குடா எக்ஸ்பிரஸ் ரயில் தற்போது புதுச்சேரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புதுச்சேரியில் இருந்து ஹைதராபாத்திற்கு நேரடியாக ரயில் மூலம் செல்ல முடியும்.வாரத்தில் திங்கள், வியாழன், வெள்ளி ஆகிய 3 நாட்கள் மதியம் 1:00 மணிக்கு புறப்படும் கச்சிக்குடா எக்ஸ்பிரஸ் ரயில், மறுநாள் காலை 7:50 மணிக்கு கச்சிக்குடா செல்கிறது. இதுதவிர புதுச்சேரி பஸ் நிலையத்தில் இருந்து ஹைதராபாத் செல்லும் தனியார் ஆம்னி பஸ்கள் விபரம்: 1. மோசோ டிராவல்ஸ் மதியம் 3:00 மணி2. வி. காவேரி டிராவல்ஸ் மாலை 4:30, 5:00 மணி 3. ஸ்ரீவாரி டிராவல்ஸ் மாலை 5:00 மணி4. பாலாஜி கேப்ஸ் மாலை 4:30, 5:00 மணி5. ஜே.பி.டி. டிராவல்ஸ் மாலை 5:00 மணி6. மார்னிங் ஸ்டார் மாலை 5:30 மணி7. ஸ்ரீகிருஷ்ணா டிராவல்ஸ் மாலை 5:00 மணி8. ஆரங்ஞ் டிராவல்ஸ் மாலை 4:00 மணி