உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ராமர் கோவில் கும்பாபிேஷகம் கோலம்: புதுச்சேரி கலைஞர் மாலதி செல்வம் அசத்தல்

ராமர் கோவில் கும்பாபிேஷகம் கோலம்: புதுச்சேரி கலைஞர் மாலதி செல்வம் அசத்தல்

புதுச்சேரி : அயோத்தி ராமர் கோவில் கும்பாபிேஷகத்தை புதுச்சேரி கலைமாமணி கலைஞர் தத்ரூபமாக கோலம் போட்டு அசத்தியுள்ளார்.முத்தியால்பேட்டை அங்காளம்மன் நகர் இரண்டாவது குறுக்கு தெருவினை சேர்ந்தவர் கலைமாமணி ஓவிய கலைஞர் மாலதி செல்வம், 52. இவர், அயோத்தி ராமர் கோவில் கும்பிேஷத்தையொட்டி, தன்னுடைய வீட்டினுள் 6 அடி நீளம், 6 அடி அகலத்தில் அயோத்தி ராமர்கோவில் கோலத்தினை போட்டு அசத்தியுள்ளார். அயோத்தியில் குழந்தை ராமர் பிரதிஷ்டை செய்யப்படுவதால், குழந்தை ராமர் புஷ்பவிமானத்தில் இருந்து அயோத்திக்கு வருவது போன்றும், அவரை பிரதமர், மக்களுடன் வரவேற்று கும்பிடுவது போன்றும் கோலம் போட்டுள்ளார். அத்துடன் வில் அம்புடன் விஸ்வரூப ராமரையும் பிரதிபலித்துள்ளார். இந்த கோல ஓவியத்தை பொதுமக்கள் பார்வையிட்டு பாராட்டி வருகின்றனர்.ஓவியர் மாலதி செல்வம் கூறுகையில், 'கோலக்கலை நமது பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் உலகிற்கு பறைசாற்றி வருகிறது. அத்தகைய சிறப்புமிக்க கலை மூலம் வரலாற்று புகழ்மிக்க அயோத்தி ராமர் கோவில் கும்பாபிேஷகத்தை கோல ஓவியமாக தீட்டியுள்ளேன்.நான்கு மணி நேரம் செலவிட்டு, கோலத்தை போட்டுள்ளேன். இது நேர்த்தியாக வந்துள்ளது, எனக்கு இறைவன் கொடுத்த வரமே' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை