உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சுகாதார உதவியாளர்களை பதவி உயர்வு மூலம் ஆய்வாளர்களாக பணியமர்த்த கோரிக்கை

சுகாதார உதவியாளர்களை பதவி உயர்வு மூலம் ஆய்வாளர்களாக பணியமர்த்த கோரிக்கை

புதுச்சேரி : சுகாதார உதவியாளர்களை பதவி உயர்வு மூலம், ஆய்வாளர்களாக பணியமர்த்த உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அரசு சுகாதார ஆய்வாளர்கள், உதவியாளர்கள் சங்க செயலாளர் ஜெகநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.அவரது அறிக்கை:சுகாதாரத் துறையில் பணிபுரிந்து வரும் சுகாதார உதவியாளர்களுக்கு, ஆய்வாளர் பதவி உயர்வு வழங்குவது வழக்கம். ஆனால், கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக சுகாதார உதவியாளர்களுக்கு பதவி உயர்வு அளிக்க நடவடிக்கை எடுக்காமல் காலம் கடத்தி வருகின்றனர்.சுகாதாரத்துறையில் உள்ள அனைத்து கேடர்களிலும், பதவி உயர்வு மூலம் பதவிகள் நிரப்பப்பட்டு வருகின்றன. ஆனால் களப்பணியாற்றி வரும் சுகாதார உதவியாளர்களின் பதவி உயர்வு, தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.சுகாதார இயக்குனர் அலுவலகத்தில் கேட்கும் போதெல்லாம் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணத்தை கூறி வருகின்றனர். தற்போது செவிலிய அதிகாரி பணியிடங்கள் நிரப்பப்பட்டு பணி நியமன ஆணையும் வழங்கப்பட்டு விட்டது.இருப்பினும், பதவி உயர்வின் மூலம் காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர்கள் பணியிடங்களை நிரப்ப எந்தவித பணிகளும் துவங்கப்படவில்லை. பெரும்பாலான சுகாதார ஆய்வாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளதால் பல்வேறு பொது சுகாதார பணிகள் பாதிப்புக்குள்ளாகி வருகிறது.எனவே, உடனடியாக தகுதியான சுகாதார உதவியாளர்களை பதவி உயர்வு மூலம் ஆய்வாளர்களாக பணியமர்த்த போர்கால அடிப்படையில் துரிதமான நடவடிக்கை எடுத்திட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை