உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி; புதுச்சேரியில் ஆட்சியை பிடிக்கும் எதிர்க்கட்சி; தலைவர் சிவா பேச்சு

 மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி; புதுச்சேரியில் ஆட்சியை பிடிக்கும் எதிர்க்கட்சி; தலைவர் சிவா பேச்சு

புதுச்சேரி: புதுச்சேரியில் வரும் 2026 சட்டசபை தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என, தி.மு.க., மாநில அமைப்பாளர் சிவா பேசினார். நெல்லித்தோப்பில் நடந்த தி.மு.க., மாநில செயற்குழு கூட்டத்தில் அவர், பேசியதாவது: இன்றைக்கு புதுச்சேரியில் முதன்மை கட்சி தி.மு.க., தான். எந்த கட்சிக்கும் இதுபோன்ற கட்டமைப்பு கிடையாது. எத்தனையோ பண முதலாளிகள் புதுச்சேரியில் வேலை பார்த்தாலும், நம்மை தொட்டு பார்க்க முடியாது. 25 தொகுதிகளில் இன்று வெற்றி வேட்பாளர்கள் தயாராக உள்ளனர். யாருக்கு சீட் கொடுத்தாலும், வெ ற்றி பெற வைப்போம். தன்மானம், சுயமரியாதை உள்ள புதுச்சேரி மக்களை பணத்தால் வாங்க முடியாது. ஏர்போர்ட் விரிவாக்கம், ரயில் சேவை விரிவாக்கம், புதிய தொழிற்சாலை எதுவும் கொண்டு வரவில்லை. மூடப்பட்டுள்ள 19 பொது நிறுவனங்களை மீண்டும் திறக்க வேண்டும். பீகாரை போன்று ஓட்டு திருட்டு, பணத்தை கொடுத்து ஓட்டுகளை வாங்க பார்ப்பார்கள். பணத்தால் புதுச்சேரி ஜனநாயகத்தை வாங்க முடியாது. தேர்தலுக்காக மாறுபவர்கள் நம் கூட்டணியில் இல்லை. 30 தொகுதிகளிலும் வேலை செய்ய சொல்லி இருக்கிறார்கள். கூட்டணி கட்சிக்காரர்களுக்கும் நாம் உழைக்க தயாராக இருக்கிறோம். எஸ்.ஐ.ஆர்., பதியும் போது பெயர் நீக்கப்படுவது, பி.எல்.ஓ., எதிர்ப்பாக செயல்படுகிறார் போன்ற பிரச்னை இருந்தால் உடனடியாக தெரியப்படுத்த வேண்டும். புதுச்சேரியில் வரும் 2026 சட்டசபை தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆட்சியை பிடிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை