உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போக்குவரத்து விதிகள் குறித்த கருத்தரங்கு

போக்குவரத்து விதிகள் குறித்த கருத்தரங்கு

புதுச்சேரி, : லாஸ்பேட்டை தாகூர் அரசு கலை அறிவியல் கல்லுாரி, கம்யூட்டர் சயின்ஸ் துறை சார்பில் சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.கம்யூட்டர் சயின்ஸ் துறை தலைவர் முருகன் வரவேற்றார். கிழக்கு போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் நாகராஜ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, போக்குவரத்து விதிகள் பின்பற்றுவதின் அவசியம், குற்ற சம்பவங்கள் நடைபெறும் விதங்கள் குறித்து பேசினார்.போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் குற்றங்கள் தொடர்பாக மாணவர்கள் எழுப்பிய பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். கல்லுாரி முதல்வர் சசிகாந்ததாஸ் சிறப்பு அழைப்பாளருக்கு வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில் பேராசிரியர் ஷியாமளா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை