உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  சகோதரி மாயம் தங்கை புகார்

 சகோதரி மாயம் தங்கை புகார்

அரியாங்குப்பம்: மனநிலை சரியில்லாமல் இருந்த சகோதரியை காணவில்லை என, தங்கை போலீசில் புகார் செய்தார். தவளக்குப்பம் அடுத்த டி.என்., பாளையத்தை சேர்ந்தவர் மகாலிங்கம் மனைவி செல்வி. இவரது சகோதரி பழனியம்மாள், 65. இவர் கணவரை விட்டு பிரிந்து, தங்கையுடன் வசித்து வந்தார். இந்நிலையில், மனநிலை சரியில்லாமல், வீட்டில் இருந்த பழனியம்மாளை கடந்த 12ம் தேதி முதல் காணவில்லை. இதுகுறித்து, செல்வி கொடுத்த புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி