உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  மழைநீர் சேகரிப்பு மையம் அமைக்க சமூக பொறுப்பு நிதி வரவேற்பு

 மழைநீர் சேகரிப்பு மையம் அமைக்க சமூக பொறுப்பு நிதி வரவேற்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் மழைநீர் சேகரிப்பு மையங்கள் அமைக்க பெரு நிறுவனங்களிடம் இருந்து சமூக பொறுப்பு நிதி வரவேற்கப்படுகிறது. உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ் ராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரியில் நிலத்தடி நீர் மட்டத்தை மேம்படுத்தும் வகையில் உழவர்கரை நகராட்சி துார்வாருதல், மழைநீர் சேகரிப்பு மையம் அமைத்தல் போன்ற பணிகளை செய்து வருகிறது. மேலும், நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தொழிற்கூடங்கள், பள்ளி மற்றும் கல்லுாரி நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், திருமண மண்டபங்கள், வணிக நிறுவனங்கள், நகராட்சி கட்டிடங்கள் மற்றும் காலி இடங்களிலும் மழைநீர் சேகரிப்பு மையம் அமைக்கப்பட்டது. இதன் ஒருபகுதியாக மேட்டுப்பாளையத்தில் உள்ள வாகன முனையத்தில், சமூக பொறுப்பு நிதி மற்றும் நகராட்சி நிதியுதவிடன் 2 மழைநீர் சேகரிப்பு மையம் நிறுவப்பட்டுள்ளது. இதுவரை நகராட்சி 14 மழைநீர் சேகரிப்பு மையம் ஏற்படுத்தப்பட்டு அவைகள் மத்திய அரசின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் ஆழமற்ற நீர்நிலை மேலாண்மை 2.0 திட்டத்தின் கீழ் கூடுதலாக 15 மழைநீர் சேகரிப்பு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவை அடுத்த 3 மாதங்களில் முடிக்கப்படும். மேலும், மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை பல்வேறு இடங்களில் நிறுவ நகராட்சிக்கு நிதி தேவைப்படுகிறது. மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவத்தை கருதி பெரு நிறுவனங்களிடம் இருந்து சமூக பொறுப்பு நிதி (சி.எஸ்.ஆர்) வரவேற்கப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை