உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விநாயகர் சதுர்த்தியையொட்டி  கோவில்களில் சிறப்பு வழிபாடு

விநாயகர் சதுர்த்தியையொட்டி  கோவில்களில் சிறப்பு வழிபாடு

புதுச்சேரி: விநாயகர் சதுர்த்தியையொட்டி புதுச்சேரியில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.  புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தி நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில், நேற்று சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதன்படி நேற்று அதிகாலை 4:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரையும் மாலை 3:00 மணி முதல் இரவு 10:00 வரையும் நடை திறந்திருந்தது. விநாயகருக்கு அதிகாலை சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். அதேபோல் கொட்டுப்பாளையம் செல்வவிநாயகர், கரிக்கலாம்பாக்கம் உக்ரமூர்த்தி விநாயகர்,முருங்கப்பாக்கம் விநாயகர், முதலியார்பேட்டை பாரதிதாசன் நகர் விநாயகர்,  உள்ளிட்ட புதுச்சேரியில் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்