| ADDED : பிப் 19, 2024 04:48 AM
திருக்கனுார்: புதுச்சேரி வெற்றித் தமிழர் பேரவை சார்பில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எழுதுபொருட்கள் வழங்கும் விழா நடந்தது.வாதானுார் அன்னை சாரதா தேவி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில் வெற்றித் தமிழர் பேரவை அமைப்பாளர் வழக்கறிஞர்கோவிந்தராசு நோக்கவுரையாற்றினார்.பள்ளி தலைமை ஆசிரியர் வீரைய்யன் தலைமை தாங்கினார். ஆசிரியர் பாலகுமார் வரவேற்றார். பேராசிரியர் ரவிக்குமார், முனைவர் கனகராசு, ஆளவந்தார், சித்தன், கவிஞர் குமாரவேலு ஆகியோர் வாழ்த்தி பேசினர்.இதில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் 50க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு எழுதுபொருட்கள், சான்றிதழ் எடுத்துச் செல்லும் பைல் (கோப்பு) வழங்கப்பட்டது.விழாவில் பள்ளியின் ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வெற்றித் தமிழர் பேரவை நிர்வாகிகள் செய்திருந்தனர்.