உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நிர்வாகத்துறையில் 800 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை: முதல்வர் அறிவிப்பு

நிர்வாகத்துறையில் 800 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை: முதல்வர் அறிவிப்பு

புதுச்சேரி: நிர்வாகத் துறையில் 800 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என, முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.பொதுப்பணித்துறையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட இளநிலை பொறியாளர்கள், மேற்பார்வையாளர்களுக்கான பணி நியமன ஆணை வழக்கும் விழாவில் அவர், பேசியதாவது:புதுச்சேரியில் உன்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பொதுப்பணித் துறை சிறப்பாக செயல்பட வேண்டும். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியிடங்கள் நிரப்பப்படாததால் பல்வேறு குறைகள் இருந்து வந்தன.அரசு பொறுபேற்றதுடன் அனைத்து துறைகளிலும் காலிப் பணியிடங்கள் நிரப்பட்டு வருகிறது. புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, எந்த இடையூறும் ஏற்படாத வகையில் போலீசார் பணியாற்றியதாக பலரும் பாராட்டினர். இதற்கு, காரணம் 2,000 போலீசார் புதிதாக பணியமர்த்தப்பட்டதே ஆகும்.நிர்வாகத் துறையில் மேலும் 800 இளைஞர்களை வேலைக்கு எடுக்கும் வாய்ப்பை அரசு உருவாக்கி உள்ளது. மூன்று மாதங்களில் அரசு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. படித்துக் கொண்டே இருங்கள், திறமை உள்ளவர்களுக்கு கட்டாயம் அரசு வேலை கிடைக்கும்.மின்துறையில் இளநிலை பொறியாளர் பணியிடங்களை ஓரிரு மாதங்களில் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சுகாதாரத் துறையில் 300 செவிலியர் பணியிடங்கள் நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசு நல்ல கல்வி கொடுப்பது மட்டுமல்லாது, அரசின் வேலை வாய்ப்பு உருவாக்கி கொடுத்து வருகிறது.சேதரப்பட்டில் 750 ஏக்கரில் புதிய தொழிற்சாலைகளை விரைவில் கொண்டு வந்து, படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது. இதன்மூலம் அரசு தனியார் நிறுவனங்கள் மூலமாகவும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வழிவகுத்து வருகிறது.உள் கட்டமைப்பு வசதிகள் தரமான முறையில் அமைய வேண்டுமென்றால், ஊழியர்கள் சரியாக பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஊழியர்களுக்கான பதவி உயர்வு காலத்தோடு கிடைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு முதல்வர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை