உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கஞ்சா விற்றால் கடும் நடவடிக்கை

கஞ்சா விற்றால் கடும் நடவடிக்கை

போலீசாருக்கு முதல்வர் உத்தரவுபுதுச்சேரி : கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் விற்போர் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ரங்கசாமி பேசினார்.புதுச்சேரி போலீஸ் கான்ஸ்டபிள் மற்றும் டிரை வர் பணியிடங்களுக்கு தேர்வானவர்களுக்கு, பணி ஆணை வழங்கிய முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:தேர்தலின்போது கூறிய வாக்குறுதிப்படி காலி பணியிடங்களை நிரப்பி வருகிறோம். பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.ஆன்லைன் மோசடியில் தினசரி பலர் லட்சம், கோடி பணத்தை இழந்து வருகின்றனர். போலீசார் சைபர் கிரைம் மீது மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். புதுச்சேரிக்கு அடுத்த சவால் கஞ்சா போதை பொருள். பள்ளி, கல்லுாரி மாணவர்கள் கஞ்சா போதைக்கு அடிமையாகி வருகின்றனர்.கஞ்சாவை கட்டுப்படுத்துவது மட்டும் இன்றி, கஞ்சா விற்போர் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க தயங்கக் கூடாது. போலீசார் ரோந்து பணியை மீண்டும் துவங்க வேண்டும். புதுச்சேரி சிறிய பகுதி. சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகின்றனர்.அதற்கு புதுச்சேரி அமைதியான மாநிலமாக திகழ வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை