உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தமிழ்ச் சங்க நிர்வாகிகள் பதிவியேற்பு விழா

தமிழ்ச் சங்க நிர்வாகிகள் பதிவியேற்பு விழா

புதுச்சேரி: புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவராக 6வது முறையாக தேர்வு செய்யப்பட்ட முத்துவுக்கு, சபாநாயகர் அன்பழகன், பதவி பிராமணம் செய்து வைத்தார். புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் நடந்த, புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பெறுப்பேற்பு விழாவில், பாவலர் சீனு மோகன்தாசு வரவேற்றார். பத்மஸ்ரீ தட்சிணாமூர்த்தி குழுவினர், பிரசிடென்சி பள்ளி மாணவர்கள் மற்றும் பாரதியார் பல்கலைக்கூட மாணவ மாணவிகள் வரவேற்பு நடனம் மற்றும் தமிழர் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தினர். சபாநாயகர் அன்பழகன், புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவராக 6வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள முனைவர் முத்துவுக்கு, பதவி பிரமாணம் செய்து வைத்தார். செயலராக சீனு மோகன்தாசு, பொருளராக பொறிஞர் பாலசுப்ரமணியன், துணைத் தலைவர்களாக திருநாவுக்கரசு, கோதண்டபாணி, துணைச் செயலராக பொறிஞர் சுரேஷ்குமார், ஆட்சிக்குழு உறுப்பினர்களாக அருள்ராசு, ராஜா, ஜெயந்தி ராஜவேலு, சிவேந்திரன், ஆனந்தராசன் ஆகியோருக்கு பதவியேற்றனர். முதன்மை விருந்தினராக அமைச்சர் சிவக்கொழுந்து கலந்து கொண்டு ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பெயர் பலகையை திறந்து வைத்து வாழ்த்தி பேசினார்.  பொறிஞர் பாலசுப்ரமணியன், வழக்கறிஞர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மயிலம் பொம்மபுர ஆதினம் 20ம் பட்டம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் ஆசியுரை வழங்கி தேவாரம்பாடி வெள்ளியால் செய்யப்பட்ட 3 அடி உயர செங்கோலை, புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் முத்துவுக்கு வழங்கி ஆசி வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி