| ADDED : டிச 06, 2025 05:02 AM
புதுச்சேரி: தட்டாஞ்சாவடி வி.வி.பி., நகரில் உள்ள வரி வசூல் மையம், ஞாயிற்று கிழமைகளிலும் செயல்படும் என உழவர்கரை நகராட்சி தெரிவித்துள்ளது. நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் செய்திக்குறிப்பு; உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளில் உள்ள வீட்டு வரி, சொத்து வரி மற்றும் சேவை வரி நிலுவைதாரர்கள், 2025-26ம் ஆண்டு வரையிலான காலத்திற்கு வரியை செலுத்துவதற்கு ஏதுவாக 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் வரும் மார்ச் மாதம் வரை அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும், தட்டாஞ்சாவடி வி.வி.பி., நகரில் உள்ள வீட்டு வரி வசூல் மையம் காலை 10.00 மணி முதல் மதியம் 1:00 மணி வரையும் மற்றும் மதியம் 2:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை வரி வசூல் செய்யப்படும். உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளில் உள்ள வீட்டு வரி, சொத்து வரி மற்றும் சேவை வரி நிலுவைதாரர்கள், 2025-26ம் ஆண்டு வரையிலான காலத்திற்கு வரியை செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். மேலும், வீட்டு வரி, சொத்து வரி மற்றும் சேவை வரி செலுத்துவோர் ஆன்லைன் மூலம் lgrams.py.gov.inஎன்ற முகவரியில், BBPS மூலமாகவும், ஜிபே, போன்பே மற்றும் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலமாகவும் வீட்டு வரி, சொத்து வரியை செலுத்தலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.