| ADDED : செப் 07, 2026 10:55 PM
புதுச்சேரி: கீழ்புத்துப்பட்டு சாமிநாதா வித்யாலயா உயர்நிலைப் பள்ளியில், ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ., சாமிநாதன் கலந்து கொண்டு அனைத்து ஆசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்கி, பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். அப்போது, அவர் பேசுகையில்‘‘ மாணவர்களிடம் குரு பக்தி குறித்து விளக்கம் அளித்தும், அனைத்து ஆசிரியர்களும், தெய்வத்துக்கு இணையாக மதிக்கப்பட வேண்டும் என்றார்.’’ நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, பள்ளி முதல்வர் சுஜாதா, துணை முதல்வர் மகாலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர். விழாவையொட்டி, மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. மேலும், அனைத்து ஆசிரியர்களையும் கவுரவப்படுத்தும் விதமாக 50 அடி பேனரில் ஆசிரியர்கள் உருவத்தை பொறித்து மாணவர்கள் தங்களின் அன்பை வெளிப்படுத்தினர்.