| ADDED : ஜன 04, 2024 03:22 AM
புதுச்சேரி; புதுச்சேரி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பல்வேறு பயிற்சி வகுப்புகள் வரும் 6ம் தேதி துவங்க உள்ளது.புதுச்சேரி மாநிலக் கூட்டுறவு ஒன்றிய மேலாண் இயக்குனர் மாறன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:புதுச்சேரி அரசு கூட்டுறவுத் துறையின் வழிகாட்டுதலின்படி, புதுச்சேரி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நகை மதிப்பீடும்அதன் தொழில்நுட்பங்கள்,டேலி பிரைம் பயன்படுத்தி கணக்கு வைப்புமுறையில் கணினியின் பங்கு,கணினி பயன்பாடு சான்றிதழ் பயிற்சி, ஆபீஸ் ஆட்டோமேஷன் சான்றிதழ் பயிற்சி, கணினி அடிப்படை சான்றிதழ் பயிற்சிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது.இப்பயிற்சி வகுப்புகள் வரும் 6ம் தேதி காலை 10:30 மணியளவில் துவங்க உள்ளது. பயிற்சிக்கு விண்ணப்பித்தவர்கள் துவக்க விழாவில் கலந்துகொள்ளவும். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள், விருப்பம் உள்ளவர்கள் நேரில் விண்ணப்பத்தினை பெற்று பயிற்சிக்கான கட்டணத்தை செலுத்தி சேரலாம்.மேலும் விவரங்களுக்கு, எண் -62, சுய்ப்ரேன் வீதி, புதுச்சேரி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நேரிலும், 0413-2220105, 2331408 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.