உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மின் கட்டணம் கருத்து கேட்பு கூட்டம் 14ம் தேதி நடக்கிறது

மின் கட்டணம் கருத்து கேட்பு கூட்டம் 14ம் தேதி நடக்கிறது

புதுச்சேரி: புதிய மின் கட்டணம் மீதான கருத்துக்கேட்பு கூட்டம் வரும் 14ம் தேதி நடக்கிறது.மின்துறை கண்காணிப்பு பொறியாளர் மற்றும் துறை தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரி மின்துறை மற்றும் புதுச்சேரி பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் சார்பில், புதிய மின் கட்டண மனு மீதான கருத்து கேட்பு கூட்டம், வரும் 14ம் தேதி காலை 10:00 மணிக்கு, புதுச்சேரி லப்போர்த் வீதி பி.எம்.எஸ்.எஸ்.எஸ்., அரங்கத்தில் நடக்கிறது.கூட்டத்தில் பங்கேற்க விரும்புவோர், 30 நிமிடத்திற்கு முன் வந்து, தங்கள் பெயர், முகவரியை பதிவு செய்ய வேண்டும். 2024-25ம் ஆண்டிற்கான மின் கட்டணம் மனு மீது பொதுமக்கள் தங்கள் கருத்துகள், ஆலோசனைகள் தெரிவிக்கலாம்.விரிவான மின் கட்டண மனு ஆவணத்தை புதுச்சேரி மின்துறை இணையதளம் http://electricity.py.gov.inமற்றும் jerc இனையதளம் http://jercuts.gov.inஆகியவற்றில் பதிவு இறக்கம் செய்து கொள்ளலாம்.இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ