உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆட்டோ டிரைவர் வீட்டில் வெள்ளி பொருட்கள் திருட்டு

ஆட்டோ டிரைவர் வீட்டில் வெள்ளி பொருட்கள் திருட்டு

புதுச்சேரி: ஆட்டோ டிரைவர் வீட்டில் புகுந்து வெள்ளி பொருட்களை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.புதுச்சேரி, வெங்கட்டா நகரை சேர்ந்தவர் ரமேஷ், 43; ஆட்டோ டிரைவர். வீட்டில் உள்ளவர்கள் வெளியே செல்லும் போது, சாவியை வீட்டு கதவின் அருகே வைத்து விட்டு செல்வது வழக்கம். நேற்று முன்தினம் வெளியே சென்ற ரமேஷ் மற்றும் அவரது மகன் சதிஷ்குமார் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, கதவு திறந்து கிடந்தது. உள்ளே பீரோவில் இருந்த வெள்ளி 30 கிராம் பொருட்கள் திருடு போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைத்தனர். வீட்டில் உள்ளவர்கள் வீட்டு கதவை பூட்டி விட்டு, சாவியை கதவின் அருகில் வைத்திருந்ததை மர்ம நபர் நோட்டமிட்டு, சாவியை எடுத்து திறந்து, வெள்ளி பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து, பெரியக்கடைபோலீசார் வழக்குப் பதிந்து, வெள்ளி பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை