உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ராமர் அட்சதை வீடு தோறும் வழங்கும் பணி துவக்கம்

ராமர் அட்சதை வீடு தோறும் வழங்கும் பணி துவக்கம்

திருக்கனுார் : அயோத்தி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மண்ணாடிப்பட்டு தொகுதியில் வீடு வீடாக ராமரின் அட்சதை வழங்கும் பணி நேற்று துவங்கியது.பகவான் ராமரின் அயோத்தி கோவில் மகா கும்பாபிஷேகம் ஜனவரி 22ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, அயோத்தி ராம ஜென்ம பூமி தீர்த்த ேஷத்ர டிரஸ்ட் மூலம் ராமர் அருள்பாலித்த அட்சதை கலசம் பூஜை செய்து, கடந்த 19ம் தேதி மண்ணாடிபட்டு தொகுதிக்கு வந்தது.அட்சதை கலசத்தை தொகுதி எம்.எல்.ஏ.,வும், அமைச்சருமான நமச்சிவாயம் வரவேற்று, கே.ஆர்.பாளையம் மாரியம்மன் கோவிலுக்கு கொண்டு சென்று, அங்கு சிறப்பு பூஜை செய்து வைக்கப்பட்டது.இதையடுத்து, ராமர் அருள்பாளித்த அட்சதை மண்ணாடிப்பட்டு தொகுதியில் வீடு தோறும் வழங்கும் பணி மணலிப்பட்டு செங்கேணி அம்மன் கோவிலில் பூஜையுடன் துவங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை