மேலும் செய்திகள்
வீடு புகுந்து தாக்கிய சம்பவம் 14 பேர் மீது வழக்கு பதிவு
4 hour(s) ago
பெயிண்டரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு பதிவு
4 hour(s) ago
புதிய தெரு மின் விளக்கு எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு
4 hour(s) ago
புதுச்சேரி: புதுச்சேரி வரதராஜர் பெருமாள் கோவிலில் இருந்து சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவிலுக்குஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை சென்றனர்.புதுச்சேரி லட்சுமி நரசிம்ம பெருமாள் ஆன்மிக வழிபாட்டு மன்றம் சார்பில், ஆண்டுதோறும் ஜனவரி முதல் ஞாயிற்றுக்கிழமை சிங்கிரிகுடி கோவிலுக்கு புனித பாதயாத்திரை செல்வது வழக்கம்.இதில், தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த திருமால் அடியார்கள், பஜனை குழுக்கள், பொதுமக்கள் பங்கேற்பர்.அந்த வகையில், 27ம் ஆண்டு புனித யாத்திரை விழா நேற்று நடந்தது.புதுச்சேரி வரதராஜர் பெருமாள் கோவிலில் இருந்து காலை 6:00 மணிக்கு பாதயாத்திரை துவங்கியது.தொடர்ந்து புதுச்சேரி, கடலுார் சாலைகள் வழியாக சிங்கிரிகுடி லட்சுமிநரசிம்மர் கோவிலை பக்தர்கள் சென்றடைந்தனர்.இதில் சுவாமிக்கு திவ்ய நாம பஜனை, விசேஷ திருமஞ்சPம் நடந்தது. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு லட்சுமி நரசிம்ம பெருமாளுக்கு பூஜிக்கப்பட்ட பிரசாதம் வழங்கப்பட்டது.பாதயாத்திரையையொட்டி, பல்வேறு பகுதிகளில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை புதுச்சேரி நரசிம்ம பெருமாள் ஆன்மிக வழிபாட்டு மன்ற தலைவர் இளங்கோ, பொருளாளர் வாசுதேவன், துணை தலைவர் சுப்ரமணியன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago