உள்ளூர் செய்திகள்

மாணவர்கள் அஞ்சலி 

புதுச்சேரி : பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சிறுமிக்கு, சவுரிராயலு பள்ளியில் பள்ளி மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்.புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இறந்த சிறுமிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, சவுரிராயலு அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் நடந்தது. பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் சிறுமியின் படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தியதுடன், கவிதை வாசித்து, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.நேற்று காலை சிறுமி படித்த அரசு தொடக்க பள்ளியில், காலையில் நடக்கும் பிரார்த்தனை வகுப்பில், பள்ளி மாணவ மாணவிகள் மவுன அஞ்சலி செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி