உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இரண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பொறுப்புகளில் இருந்து விடுவிப்பு

இரண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பொறுப்புகளில் இருந்து விடுவிப்பு

புதுச்சேரி, : இடமாற்றம் செய்யப்பட்ட இரண்டு புதுச்சேரி ஐ.ஏ.எஸ்.,அதிகாரிகள், பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.மத்திய உள்துறை அமைச்சகம் பல்வேறு மாநிலங்களில் பணிபுரியும் 13 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்,17 ஐ.பி.எஸ்., அதிகாரிகளை கடந்த ஜனவரி 28ம் தேதி இடமாற்றம் செய்து உத்தரவிட்டது.அதில் புதுச்சேரி கலெக்டர் வல்லவன் புதுச்சேரியில் இருந்து கோவாவிற்கும், மற்றொரு புதுச்சேரி ஐ.ஏ.எஸ்.,அதிகாரி சவுத்ரி அபிஜித் விஜய் சண்டிகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இவர்களுக்கு பதிலாக அருணாசலபிரதேச ஐ.ஏ.எஸ்.,அதிகாரி தல்வாடு புதுச்சேரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.இடமாற்றம் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ்.,அதிகாரிகள் வல்லவன்,சவுத்ரி அபிஜித் விஜய் ஆகியோர் பணி ஒதுக்கப்பட்ட மாநிலங்களில் சேருவதற்காக புதுச்சேரி துறை பொறுப்புகளில் நேற்று விடுவிக்கப்பட்டனர். கவர்னரின் உத்தரவின்படி தலைமை செயலர் சரத் சவுகான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை