உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வித்யா பவன் பள்ளி ஆண்டு விழா

வித்யா பவன் பள்ளி ஆண்டு விழா

புதுச்சேரி: வித்யா பவன் பள்ளிக் குழுமத்தின், தேங்காய்திட்டு வித்யாபவன் மேனிலைப்பள்ளி, தவளக்குப்பம் வித்யா பவன் இன்டர்நேஷனல் பள்ளிகளில் 14வது ஆண்டு விழா நடந்தது.தேங்காயத்திட்டு பள்ளி மைதானத்தில் நடந்த விழாவை சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார். பாஸ்கர் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். வித்யா பவன் பள்ளிக் குழுமத்தின் சேர்மன் ராஜசேகரன், ஒருங்கிணைந்த பள்ளி முதல்வர் ரேகா ராஜசேகரன் வரவேற்றனர். விழாவில் சபாநாயகர் செல்வம், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கி, பாராட்டினார்.இந்தாண்டு எல்.கே.ஜி., முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பிலும் முதல் இடம் பிடித்த மாணவர்களுக்கும், 100 சதவீதம் வருகை தந்த மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.ஆண்டு விழாவில் பரத நாட்டியம், நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை