| ADDED : ஜன 20, 2024 06:23 AM
புதுச்சேரி : தாயை ஆபாசமாக திட்டியதால் வாலிபரை வெட்டி கொலை செய்தததாக கைதான சகோதரர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.புதுச்சேரி, ரெட்டியார்பாளையம் அஜிஸ் நகரைச் சேர்ந்தவர் கிஷோர், 27; திலாஸ்பேட்டை நடுத்தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவர் மீது அடிதடி வழக்குகள் உள்ளன. இவருக்கும், நடன பள்ளி நடத்தி வரும் ரெட்டியார்பாளையம் புதுநகரைச் சேர்ந்த சகோதரர்கள் அமீர்கான், 26; ஷாருக்கான், 24, ஆகியோருக்கும் முன் விரோதம் உள்ளது.இந்நிலையில் நேற்று முன்தினம் கிஷோரை, சகோதரர்கள் அமீர்கான், ஷாருக்கான் இருவரும் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்தனர்.ரெட்டியார்பாளையம் சப் இன்ஸ்பெக்டர் முருகன், கொலை வழக்கு பதிவு செய்து அமீர்கான், ஷாருக்கானை கைது செய்தார்.கைதான இருவரும் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:இறந்த கிேஷார், ஜெகதீஷ், வெற்றிநாராயணன் மூவரும் நண்பர்கள். வெற்றி நாராயணன் சுசிகி கிக்ஸர் பைக் வைத்திருந்தார். வெற்றிநாராயணன் கோயம்புத்துார் வேலைக்கு சென்றார். அவரது பைக்கை பயன்படுத்த அமீர்கான் கேட்டதற்கு வெற்றிநாராயணன் தர மறுத்தார்.ஆனால் அவரது பைக்கை ஜெகதீஷ் பயன்படுத்தி வந்தார். எங்களுக்கு தராமல் ஜெகதீஷ்க்கு பைக் கொடுக்கிறாய். புதுச்சேரிக்கு வா உன்னை பார்த்து கொள்கிறேன் என, மிரட்டினர்.பயந்து போன வெற்றிநாராயணன், கிேஷார் உதவியை நாடினார். நேற்று முன்தினம் அமீர்கான் வீட்டிற்கு வெற்றிநாராயணன், கிேஷார் வந்தனர். அப்போது, தகராறில் ஈடுபட்ட கிேஷாரை தடுத்த அமீர்கானின் தாயை ஆபாசமாக திட்டினார். அதனால் ஆத்திரமடைந்து கிேஷாரை கத்தியால் வெட்டி கொலை செய்ததாக தெரிவித்தனர்.கைது செய்யப்பட்ட இரு வரையும் நேற்று போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.