உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மயங்கி விழுந்து தொழிலாளி சாவு

மயங்கி விழுந்து தொழிலாளி சாவு

புதுச்சேரி: ரோடியார்பேட், கோலத்தார் தோப்பு வீதியை சேர்ந்தவர் வேலாயுதம், 46; கூலி தொழிலாளி. இவரது தாய், தந்தை இறந்து விட்டதால், திருமணம் செய்து கொள்ளாமல், தனியாக வசித்து வந்தார். குடிபழக்கம் உடைய வேலாயுதம், நேற்று முன்தினம் அதிக போதையில் வீட்டில் சுயநினைவு இல்லாமல் மயங்கி கிடப்பதாக அவரது நண்பர் கல்யாணகுமாருக்கு தகவல் வந்தது.  கல்யாணகுமார், வேலாயுதம் வீட்டிற்கு சென்று, மயங்கி கிடந்தவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.  அங்கு டாக்டர் பரிசோதித்து, ஏற்கனவே வேலாயுதம் இறந்து விட்டதாக தெரிவித்தார். கல்யாணகுமார் புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி