மேலும் செய்திகள்
பாட்மின்டன்: தான்யா அபாரம்
08-Oct-2025
காலிறுதியில் லக்சயா
30-Oct-2025
சார்லந்த்ஹாலே: ஜெர்மனி பாட்மின்டன் அரையிறுதிக்கு முன்னேறினார் இந்தியாவின் உன்னதி. ஜெர்மனியில் 'ஹைலோ' ஓபன் சர்வதேச பாட்மின்டன் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் காலிறுதியில் இந்தியாவின் உன்னதி ஹூடா ('நம்பர்-34'), தைவானின் ஹிசியாங்கை ('நம்பர்-4) எதிர்கொண்டார். முதல் செட்டை 22-20 என போராடி கைப்பற்றினார் உன்னதி. தொடர்ந்து அடுத்த செட்டை 21-13 என எளிதாக வசப்படுத்தினார். முடிவில் உன்னதி 22-20, 21-13 என வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார். ஆயுஷ் 'ஷாக்'ஆண்கள் ஒற்றையர் காலிறுதியில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, பின்லாந்தின் காலேவை சந்தித்தார். முதல் இரு செட்டை இருவரும் மாறி மாறி கைப்பற்றினர். வெற்றியாளரை முடிவு செய்யும் மூன்றாவது, கடைசி செட்டில் ஆயுஷ் 20-18 என முன்னிலையில் இருந்தார். பின் தொடர்ந்து 4 புள்ளிகளை இழக்க, 3வது செட்டை (20-22) நழுவவிட்டார். முடிவில் ஆயுஷ் 21-19, 12-21, 20-22 என தோல்வியடைந்தார்.மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் லக்சயா சென், பிரான்சின் அலெக்ஸ் லானியரை சந்தித்தார். முதல் செட்டை இழந்த (17-21) லக்சயா, அடுத்த செட்டை 21-14 என கைப்பற்றினார். மூன்றாவது செட்டை 21-15 என கோட்டை விட்டார். முடிவில் லக்சயா 17-21, 21-14, 15-21 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.
08-Oct-2025
30-Oct-2025