மேலும் செய்திகள்
மாஸ்டர்ஸ் பாட்மின்டன்: ஷ்ரியான்ஷி கலக்கல்
19 hour(s) ago
கொரிய பாட்மின்டன்: இந்தியா ஏமாற்றம்
24-Sep-2025
டெக்சாஸ்: யு.எஸ்., ஓபன் பாட்மின்டன் காலிறுதிக்கு இந்தியாவின் மாளவிகா முன்னேறினார்.அமெரிக்காவின் டெக்சாசில் யு.எஸ்., ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் மாளவிகா, செக் குடியரசின் தெரெஜாவை சந்தித்தார். முதல் செட்டை 15-21 என இழந்த மாளவிகா, அடுத்த இரு செட்டையும் 21-19, 21-14 என வென்றார். முடிவில் மாளவிகா 15-21, 21-19, 21-14 என்ற செட்டில் போராடி வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.ஆண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் பிரியான்ஷு, 21-18, 21-16 என்ற நேர் செட் கணக்கில், சீன தைபே வீரர் ஹுவாங் யுவை சாய்க்க, காலிறுதிக்குள் நுழைந்தார்.பெண்கள் இரட்டையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் திரீசா, காயத்ரி ஜோடி, 16-21, 21-11, 21-19 என்ற செட்டில் சீனா தைபேவின் பெய் ஷன், ஹுவாங் யென் ஜோடியை வென்று, காலிறுதிக்கு முன்னேறியது.
19 hour(s) ago
24-Sep-2025