மேலும் செய்திகள்
மாஸ்டர்ஸ் பாட்மின்டன்: ஷ்ரியான்ஷி கலக்கல்
14 hour(s) ago
கொரிய பாட்மின்டன்: இந்தியா ஏமாற்றம்
24-Sep-2025
யோகோஹாமா: ஜப்பான் ஓபன் பாட்மின்டன் 2வது சுற்றுக்கு இந்தியாவின் சதிஷ் குமார் தகுதி பெற்றார்.ஜப்பானில் சர்வதேச பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சதிஷ் குமார் கருணாகரன், டென்மார்க்கின் ஆன்டர்ஸ் ஆன்டன்சென் மோதினர். முதல் செட்டில் சதிஷ் குமார் 6-1 என முன்னிலை பெற்றிருந்த போது டென்மார்க் வீரர் காயத்தால் பாதியில் விலகினார். இதனையடுத்து சதிஷ் குமார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.மற்றொரு முதல் சுற்றில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ் 19-21, 14-21 என ஜப்பானின் சுனேயமாவிடம் தோல்வியடைந்தார்.பெண்கள் இரட்யைடர் முதல் சுற்றில் இந்தியாவின் ருதுபர்னா, ஸ்வேதாபர்னா ஜோடி 8-21, 14-21 என டென்மார்க்கின் ஜூலி, சரோவ் ஜோடியிடம் தோல்வியடைந்தது.கலப்பு இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் சுமீத், சிக்கி ரெட்டி ஜோடி காயத்தால் பாதியில் விலகியது.
14 hour(s) ago
24-Sep-2025