மேலும் செய்திகள்
பவுமா மீண்டும் கேப்டன் * தென் ஆப்ரிக்க ஒருநாள் அணிக்கு...
16 hour(s) ago
சூப்பர் ஓவரில் * இந்தியா ஏ தோல்வி
16 hour(s) ago
பெர்த்: ஆஷஸ் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி வெற்றியுடன் துவக்கியது. டிராவிஸ் ஹெட் சதம் விளாச 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. பெர்த் மைதானத்தில் முதல் டெஸ்ட் நடந்தது.இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 172 ரன் எடுத்தது. முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 123/9 ரன் எடுத்திருந்தது. இரண்டாம் நாள் ஆட்டத்தில் பிரைடன் கார்ஸ் பந்தில் நாதன் லியான் (4) அவுட்டானார். ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 132 ரன்னுக்கு சுருண்டது. இங்கிலாந்து சார்பில் ஸ்டோக்ஸ் 5, கார்ஸ் 3, ஆர்ச்சர் 2 விக்கெட் கைப்பற்றினர்.பின் 2வது இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலிய 'வேகத்தில்' தடுமாறியது. ஸ்டார்க் பந்தில் ஜாக் கிராலே (0), ஜோ ரூட் (8), கேப்டன் பென் ஸ்டோக்ஸ் (2) அவுட்டாகினர். பென் டக்கெட் (28), போப் (33), அட்கின்சன் (37) ஆறுதல் தந்தனர். இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 164 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. ஆஸ்திரேலியா சார்பில் ஸ்காட் போலந்து 4, ஸ்டார்க், டாக்கெட் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.பின் 205 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டிராவிஸ் ஹெட் (123) சதம் கடந்து கைகொடுத்தார். மார்னஸ் லபுசேன் (51*) அரைசதம் விளாசினார். ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் 205/2 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இங்கிலாந்து சார்பில் பிரைடன் கார்ஸ் 2 விக்கெட் வீழ்த்தினார்.ஆஸ்திரேலிய அணி 1-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது டெஸ்ட் (பகலிரவு) வரும் டிச. 4ல் பிரிஸ்பேனில் துவங்குகிறது.
16 hour(s) ago
16 hour(s) ago