உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / அஷ்வின் நம்பர்-1: ஐ.சி.சி., தரவரிசையில்

அஷ்வின் நம்பர்-1: ஐ.சி.சி., தரவரிசையில்

துபாய்: ஐ.சி.சி., டெஸ்ட் பவுலர் தரவரிசையில் இந்தியாவின் அஷ்வின் 'நம்பர்-1' இடத்தில் நீடிக்கிறார்.டெஸ்ட் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. பவுலர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் அஷ்வின் 853 புள்ளிகளுடன் 'நம்பர்-1' இடத்தை தக்கவைத்துக் கொண்டார். இவர் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இரு இன்னிங்சிலும் சேர்த்து 6 விக்கெட் கைப்பற்றினார். இப்போட்டியில் 6 விக்கெட் சாய்த்த இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா (825 புள்ளி) 5வது இடத்தில் இருந்து 4வது இடத்துக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய 'சுழல்' வீரர் ரவிந்திர ஜடேஜா (754) 6வது இடத்தில் நீடிக்கிறார்.'ஆல்-ரவுண்டர்' தரவரிசையில் இந்தியாவின் ஜடேஜா (425), அஷ்வின் (328) முதலிரண்டு இடங்களில் தொடர்கின்றனர். இங்கிலாந்தின் ஜோ ரூட் (313) 5வது இடத்தில் இருந்து 4வது இடத்துக்கு முன்னேறினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பிரிஸ்பேன் டெஸ்டில் 7 விக்கெட் சாய்த்த வெஸ்ட் இண்டீசின் ஷமர் ஜோசப் (397) 42 இடங்கள் முன்னேறி 50வது இடத்தை இலங்கையின் லஹிரு குமாராவுடன் பகிர்ந்து கொண்டார்.பேட்டர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் விராத் கோலி (767) 7வது இடத்தில் இருந்து 6வது இடத்துக்கு முன்னேறினார். இந்தியாவுக்கு எதிரான ஐதராபாத் டெஸ்டில் 196 ரன் விளாசிய இங்கிலாந்தின் போப் (684) 20 இடங்கள் முன்னேறி 15வது இடத்தை கைப்பற்றினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை