மேலும் செய்திகள்
வில்லியம்சன் தேர்வு: நியூசிலாந்து அணி அறிவிப்பு
19 minutes ago
புதிய கேப்டன் ராகுல்: இந்திய அணி அறிவிப்பு
23-Nov-2025
கூச் பெஹார் டிராபி: தமிழகம் அபாரம்
22-Nov-2025 | 1
கவுகாத்தி: கவுகாத்தி டெஸ்டில் இந்திய பேட்டர்கள் ஏமாற்ற, தென் ஆப்ரிக்காவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 'பவுன்சர்' புயல் யான்சென், 6 விக்கெட் (சிக்சர்) சாய்த்தார். இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் சவாலில் இந்தியா தோற்றது. இரண்டாவது டெஸ்ட், அசாமின் கவுகாத்தியில் உள்ள பர்சாபரா மைதானத்தில் நடக்கிறது. தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 489 ரன் குவித்தது. இரண்டாவது நாள் முடிவில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 9/0 ரன் எடுத்து, 480 ரன் பின்தங்கியிருந்தது. ஜெய்ஸ்வால் அரைசதம்: மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. ராகுல், ஜெய்ஸ்வால் நல்ல துவக்கம் தர, ஸ்கோர் 65/0 என சீராக சென்றது. இந்த சமயத்தில் மஹாராஜ் 'சுழலில்' ராகுல் (22) அவுட்டானார். ஹார்மர் பந்தில் 2 ரன் எடுத்த ஜெய்ஸ்வால், அரைசதம் எட்டினார். 95/1 என வலுவாக இருந்த இந்திய அணி திடீரென சரிவை சந்தித்தது. 'டாப்-ஆர்டர்' பேட்டர்கள் பொறுப்பற்ற 'ஷாட்' அடித்தனர். ஹார்மர் பந்தில் ரிக்கிள்டனின் கலக்கல் 'கேட்ச்சில்' சாய் சுதர்சன் (15) வெளியேறினார். யான்சென் 'பவுன்சரில்' துருவ் ஜுரல் (0) நடையை கட்டினார். யான்சென் பந்தை தேவையில்லாமல் இறங்கி வந்து அடித்த கேப்டன் ரிஷாப் பன்ட் (7) விக்கெட்டை பறிகொடுத்தார். யான்சென் 'பவுன்சரில்' நிதிஷ் குமார் (10), ரவிந்திர ஜடேஜா (6) அவுட்டாக, 122/7 என்ற நிலைக்கு தள்ளப்பட்டது. 6 விக்கெட் அதிசயம்: பின் வாஷிங்டன் சுந்தர், குல்தீப் போராடினர். 8வது விக்கெட்டுக்கு 72 ரன் சேர்த்தனர். ஹார்மர் பந்தில் வாஷிங்டன் சுந்தர் (48 ரன், 92 பந்தில்) சிக்கினார். குல்தீப் யாதவை (19 ரன், 134 பந்தில்) வெளியேற்றிய யான்சென், தனது 5வது விக்கெட்டை பெற்றார். 'டெயிலெண்டரான' குல்தீப் 2 மணி நேரத்திற்கு மேல் தாக்குப்பிடித்தார். இது, ரிஷாப், துருவ் ஜுரலின் தவறான பேட்டிங் அணுகுமுறையை அம்பலப்படுத்தியது. தனது இன்னொரு 'பவுன்சரில்' பும்ராவை (5) பெவிலியனுக்கு அனுப்பிய யான்சென், 6வது விக்கெட்டை பெற்றார். இந்திய அணி முதல் இன்னிங்சில் 201 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. தென் ஆப்ரிக்கா 288 ரன் முன்னிலை பெற்றது. கடின இலக்கு: இந்தியாவுக்கு 'பாலோ-ஆன்' கொடுக்காத தென் ஆப்ரிக்கா, மீண்டும் பேட் செய்தது. மார்க்ரம் (12*), ரிக்கிள்டன் (13) உறுதியாக ஆடினர். மூன்றாவது நாள் ஆட்ட முடிவில் தென் ஆப்ரிக்க அணி, இரண்டாவது இன்னிங்சில் 26/0 ரன் எடுத்து, 314 ரன் முன்னிலை பெற்று வலுவாக இருந்தது. இன்று விரைவாக ரன் சேர்த்து, இந்தியாவுக்கு இமாலய இலக்கை நிர்ணயிக்கும். யான்சென், மஹாராஜ், ஹார்மர் போன்ற பவுலர்களிடம் இந்திய பேட்டர்கள் தப்புவது கடினம். இப்போட்டியில் வெல்லும் பட்சத்தில் தென் ஆப்ரிக்க அணி 2-0 என தொடரை முழுமையாக கைப்பற்ற வாய்ப்பு உள்ளது. 'பவுன்சர் பவர்'கவுகாத்தி டெஸ்டில் 'ஆல்-ரவுண்டராக' அசத்துகிறார் யான்சென். 91 பந்தில் 93 ரன் விளாசினார். நேற்று 'வேகத்தில்' மிரட்டிய இவர், 6 விக்கெட் சாய்த்தார். இதில் குல்தீப் தவிர மற்ற 5 விக்கெட்டுகளை தனது துல்லிய 'பவுன்சர்' மூலம் கைப்பற்றினார். இவரது பந்தை கேப்டன் ரிஷாப் பன்ட் இறங்கி வந்து அடிக்க முற்பட்டு கீப்பரிடம் 'கேட்ச்' கொடுத்து வீணாக அவுட்டானார். இது, ரிஷாப் பேட்டிங் குறித்து கேள்வி எழுப்பியது. 'கவுகாத்தி ஆடுகளம் சாலை போல மந்தமாக உள்ளது' என குல்தீப் யாதவ் கூறியிருந்தார். ஆனால் 6 அடி 8 'இன்ச்' உயரம் கொண்ட யான்சென் 6 விக்கெட் வீழ்த்தி, 'ஆடுகளத்தில் குறை இல்லை; இந்திய பேட்டர்களின் ஆட்டத்தில் தான் தவறு உள்ளது' என்பதை நிரூபித்தார். யான்சென் கூறுகையில்,''கவுகாத்தி ஆடுகளம் சிறப்பாக உள்ளது. 'பவுன்சர்' பந்துகளை சமாளித்தால் ரன் எடுக்கலாம். சிறப்பாக பந்துவீசினால் விக்கெட் வீழ்த்தலாம் ரிஷாப் 'ஷாட்' பற்றி விமர்சிக்கின்றனர். அவர் அடித்த பந்து எனது தலைக்கு மேலே பறந்து சிக்சர் ஆக மாறியிருந்தால், வேறு விதமாக விவாதித்திருப்பர். 'பவுன்சர்' மூலம் துருவ் ஜுரல் விக்கெட்டை வீழ்த்திய போது, இதே 'ஆயுதத்தை' தொடர்ந்து பயன்படுத்த முடிவு செய்தேன். இதற்கு நல்ல பலன் கிடைத்தது. இந்திய ஆடுகளங்களில் எனது உயரம் காரணமாக எல்.பி.டபிள்யு., முறையில் விக்கெட் வீழ்த்த முடியாமல் தவித்திருக்கிறேன். அப்போது ரபாடா போன்றவர்களை பார்த்து பொறாமைப்படுவேன். பந்துகள் 'பவுன்ஸ்' ஆகும் கவுகாத்தி ஆடுகளத்தில் எனது திறமைக்கு ஏற்ப பந்துவீச கற்றுக் கொண்டேன்,''என்றார்.95/1-122/7இந்திய அணி முதல் இன்னிங்சில் 95/1 என இருந்தது. கூடுதலாக 27 ரன் மட்டும் சேர்த்த நிலையில் 122/7 என சரிந்தது. சொந்த மண்ணில், டெஸ்டில் 90+/1 எடுத்து, 7 விக்கெட்டுகளை விரைவாக பறிகொடுத்த பட்டியலில் 2வது இடம் பெற்றது. இதற்கு முன் வெஸ்ட் இண்டீசிற்கு எதிராக (கோல்கட்டா, 1966-67) 41 ரன் இடைவெளியில் 98/1-139/7 என சரிந்தது. முதல் வீரர்டெஸ்டில் இந்தியாவுக்கு எதிராக 50+ ரன், 6 விக்கெட் வீழ்த்திய முதல் தென் ஆப்ரிக்க பவுலரானார் யான்சென் (93 ரன், 6/48). அடுத்த இடத்தில் நிக்கி போயே (85 ரன், 5/83, பெங்களூரு, 2000) உள்ளார். * இந்தியாவில் டெஸ்டில் 5 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய மூன்றாவது தென் ஆப்ரிக்க வேகப்பந்துவீச்சாளரானார் யான்சென் (6/48). முதல் இரு இடத்தில் குளூஸ்னர் (8/64, கோல்கட்டா, 1996), ஸ்டைன் (7/51, நாக்பூர், 2010) உள்ளனர்.* இந்தியாவில் 5 விக்.,+ 50 + ரன் எடுத்த மூன்றாவது வீரர் யான்சென் (93 ரன், 6 விக்.,). முதல் இரு இடங்களில் நிக்கி போயே (தெ.ஆ., பெங்களூரு, 2000), ஜேசன் ஹோல்டர் (வெ.இ., ஐதராபாத், 2008) உள்ளனர்.* கடந்த 1988க்கு பின் இந்திய மண்ணில் 5 விக்கெட் வீழ்த்திய மூன்றாவது இடது கை 'வேகப்புயல்' யான்சென். ஏற்கனவே ஜாகிர் கான்(3 முறை), மிட்சல் ஜான்சன் (மொகாலி, 2010) 5 விக்கெட் வீழ்த்தினர்.'மின்னல்' மார்க்ரம்யான்சென் 'வேகத்தில்' நிதிஷ் குமார் கொடுத்த 'கேட்ச்சை', இரண்டாவது 'ஸ்லிப்' திசையில் நின்ற மார்க்ரம் முன்னோக்கி ஓடி வந்து ஒரே கையால் பிடித்து வியக்க வைத்தார். மொத்தம் 5 'கேட்ச்' பிடித்தார். கிரேம் ஸ்மித்திற்கு (எதிர், ஆஸி., 2012, பெர்த்) பின் ஒரு இன்னிங்சில் 5 கேட்ச் பிடித்த 2வது தென் ஆப்ரிக்க வீரரானார். ஒட்டுமொத்தமாக 16வது வீரர்.
19 minutes ago
23-Nov-2025
22-Nov-2025 | 1