உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / விண்ணைத்தொட்ட வினேஷ் போகத் * மல்யுத்தத்தில் பதக்கம் உறுதி

விண்ணைத்தொட்ட வினேஷ் போகத் * மல்யுத்தத்தில் பதக்கம் உறுதி

பாரிஸ்: ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் பைனலுக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை ஆனார் வினேஷ் போகத். இவர் தங்கம் அல்லது வெள்ளி பதக்கம் வெல்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.ஒலிம்பிக்கில் மல்யுத்த போட்டி நடக்கின்றன. பெண்களுக்கான பிரீஸ்டைல், 50 கிலோ பிரிவு போட்டி நடந்தது. வழக்கமாக 53 கிலோ பிரிவில் களமிறங்கும் இந்தியாவின் வினேஷ் போகத், முதன் முறையாக இப்பிரிவில் பங்கேற்றார்.முதல் சுற்றில் நடப்பு ஒலிம்பிக், நான்கு முறை உலக சாம்பியன், உலகின் 'நம்பர்-1' வீராங்கனை, ஜப்பானின் யுய் சுசாகியை எதிர்கொண்டார். சர்வதேச அரங்கில் ஒரு போட்டியில் கூட தோற்காத சுசாகி, வழக்கம் போல் ஆதிக்கம் செலுத்தினார்.முதல் 3 நிமிட 'பீரியடில்' வினேஷ் 0-1 என பின் தங்கினார். இரண்டாவது 'பீரியடிலும்' இவர் 0-2 என்ற நிலைக்கு சென்றார். போட்டி முடிய 9 வினாடி இருந்த போது, சிறப்பாக செயல்பட்ட வினேஷ், சுசாகியை கீழே தள்ள 2 புள்ளி கிடைத்தது. இதை எதிர்த்து சுசாகி அப்பீல் செய்த போதும் பலன் கிடைக்கவில்லை. முடிவில் வினேஷ் 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட, காலிறுதிக்கு முன்னேறினார். சர்வதேச அரங்கில் சுசாகியின் முதல் தோல்வியாக இது அமைந்தது.இதில் ஐரோப்பிய சாம்பியன், 2018 உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்ற உக்ரைனின் ஆக்சனா லிவாச்சை சந்தித்தார்.துவக்கத்தில் 4-0 என வினேஷ் முன்னிலை வகித்தார். பின் ஒரு கட்டத்தில் 5-4 என்ற நிலைக்கு சென்றார். போட்டி முடிய 48 வினாடி மீதம் இருந்த போது, வினேஷ் கூடுதலாக 2 புள்ளி எடுத்தார். முடிவில் 7-5 என்ற கணக்கில் வெற்றி பெற்று, ஒலிம்பிக் அரங்கில் முதன் முறையாக அரையிறுதிக்கு முன்னேறினார்.இதில் கியூபாவின் லோபசை 5-0 என வீழ்த்தி, பைனலுக்கு முன்னேறினார். இதையடுத்து ஒலிம்பிக் மல்யுத்த பைனலுக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என சாதனை படைத்தார் வினேஷ் போகத்.முதல் தோல்விசுசாகி 25, சர்வதேச மல்யுத்த அரங்கில், ஒலிம்பிக் போட்டிக்கு முன்னதாக பங்கேற்ற 82 சர்வதேச போட்டிகளில் ஒன்றில் கூட தோற்றது கிடையாது. கடந்த 10 ஆண்டுகளாக 733 புள்ளி குவித்த இவர், எதிரணி வீராங்கனைகளுக்கு 34 புள்ளி மட்டுமே விட்டுக் கொடுத்திருந்தார். * 17, 20, 23 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக, ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ந்து தங்கம் வென்றுள்ளார். நேற்று முதன் முறையாக வினேஷ் போகத்திடம் தோற்றார்.நிஷாவுக்கு 'ஸ்கேன்'பெண்களுக்கான பிரீஸ்டைல், 68 கிலோ பிரிவில் இந்தியாவின் நிஷா தாஹியா காலிறுதிக்கு முன்னேறினார். இதில் நிஷா 8-1 என முன்னிலையில் இருந்த போது, வலது கையில் காயம் ஏற்பட, 8-10 என தோற்றார். நேற்று இவரது மணிக்கட்டு பகுதியில் ஸ்கேன் செய்யப்பட்டது.இந்திய அணி பயிற்சியாளர் வீரேந்தர் தாஹியா கூறுகையில்,'' தென் கொரிய வீராங்கனை சோல் கம் பாக், வேண்டுமென்றே, நிஷா காயத்தை பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளார். நிஷா மணிக்கட்டில் தாக்குமாறு அவரது பயிற்சியாளர் வெளியில் இருந்து தெரிவித்தார். தற்போது நிஷா பதக்கத்தை பறித்து விட்டனர்,' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ