உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / ரஞ்சி கோப்பை: அரையிறுதியில் தமிழகம்

ரஞ்சி கோப்பை: அரையிறுதியில் தமிழகம்

கோவை: ரஞ்சி கோப்பை அரையிறுதிக்கு தமிழக அணி முன்னேறியது. காலிறுதியில் இன்னிங்ஸ், 33 ரன் வித்தியாசத்தில் சவுராஷ்டிராவை வீழ்த்தியது.இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் ரஞ்சி கோப்பை 89வது சீசன் நடக்கிறது. கோவை ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி மைதானத்தில் நடந்த காலிறுதியில் தமிழகம், சவுராஷ்டிரா அணிகள் மோதின. சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் 183 ரன் எடுத்தது. இரண்டாம் நாள் முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 300/6 ரன் எடுத்திருந்தது.மூன்றாம் நாள் ஆட்டத்தில் விஜய் சங்கர் (18), முகமது அலி (17) நிலைக்கவில்லை. முகமது (4), சந்தீப் வாரியர் (7) ஏமாற்றினர். தமிழக அணி முதல் இன்னிங்சில் 338 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. அஜித் ராம் (23) அவுட்டாகாமல் இருந்தார். சவுராஷ்டிரா சார்பில் சிராக் ஜானி 3 விக்கெட் வீழ்த்தினார்.பின் 2வது இன்னிங்சை துவக்கிய சவுராஷ்டிரா அணி 122 ரன்னுக்கு சுருண்டு இன்னிங்ஸ் தோல்வியடைந்தது. புஜாரா (46), கெவின் (27), அர்பித் (20) ஆறுதல் தந்தனர். தமிழகம் சார்பில் சாய் கிஷோர் 4, சந்தீப் வாரியர் 3, அஜித் ராம் 2 விக்கெட் சாய்த்தனர்.

மும்பை முன்னிலை

மும்பையில் நடக்கும் காலிறுதியின் முதல் இன்னிங்சில் மும்பை 384, பரோடா 348 ரன் எடுத்தன. ஆட்டநேர முடிவில் மும்பை அணி 2வது இன்னிங்சில் 21/1 ரன் எடுத்து, 57 ரன் முன்னிலையில் உள்ளது.* நாக்பூரில் நடக்கும் காலிறுதியின் முதல் இன்னிங்சில் விதர்பா 460, கர்நாடகா 286 ரன் எடுத்தன. விதர்பா அணி 2வது இன்னிங்சில் 50/0 ரன் எடுத்து 224 முன்னிலை பெற்றிருந்தது.* இந்துாரில் நடக்கும் காலிறுதியின் முதல் இன்னிங்சில் மத்திய பிரதேசம் 234, ஆந்திரா 172 ரன் எடுத்தன. ம.பி., அணி 2வது இன்னிங்சில் 107 ரன்னுக்கு சுருண்டது. பின் 170 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆந்திரா, ஆட்டநேர முடிவில் 95/4 ரன் எடுத்திருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி