உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / அமெரிக்கா அசத்தல் வெற்றி: கனடாவுக்கு அதிர்ச்சி

அமெரிக்கா அசத்தல் வெற்றி: கனடாவுக்கு அதிர்ச்சி

டல்லாஸ்: 'டி-20' உலக கோப்பை தொடரை அமெரிக்க அணி வெற்றியுடன் துவக்கியது. லீக் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் ஐ.சி.சி., 'டி-20' உலக கோப்பை 9வது சீசன் நடக்கிறது. நேற்று அமெரிக்காவின் டல்லாசில் நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில் அமெரிக்கா, கனடா அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற அமெரிக்கா 'பீல்டிங்' தேர்வு செய்தது.கனடா அணிக்கு ஆரோன் ஜான்சன் (23) நல்ல துவக்கம் கொடுத்தார். நவ்னீத் தலிவால் (61), நிக்கோலஸ் கிர்டன் (51) அரைசதம் கடந்தனர். ஸ்ரேயாஸ் மொவ்வா (32*) கைகொடுக்க, கனடா அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 194 ரன் எடுத்தது.

ஜோன்ஸ் ஜோர்

சவாலான இலக்கை விரட்டிய அமெரிக்க அணிக்கு கேப்டன் மோனக் படேல் (16) ஏமாற்றினார். ஆன்ட்ரிஸ் கவுஸ் (65) அரைசதம் அடித்தார். ஆரோன் ஜோன்ஸ், 22 பந்தில் அரைசதம் விளாசினார். நிகில் தத்தா பந்தை சிக்சருக்கு அனுப்பிய ஜோன்ஸ் வெற்றியை உறுதி செய்தார்.அமெரிக்க அணி 17.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 197 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஜோன்ஸ் (94 ரன், 10 சிக்சர்), கோரி ஆண்டர்சன் (3) அவுட்டாகாமல் இருந்தனர்.

10 சிக்சர்

'டி-20' உலக கோப்பையில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் (10) விளாசிய வீரர்கள் வரிசையில் 2வது இடத்தை வெஸ்ட் இண்டீசின் கெய்லுடன் (எதிர்-தெ.ஆப்., 2007) பகிர்ந்து கொண்டார் அமெரிக்காவின் ஜோன்ஸ். முதலிடத்தில் கெய்ல் (11 சிக்சர், எதிர்-இங்கிலாந்து, 2016) உள்ளார்.

195 ரன் 'சேஸ்'

'டி-20' உலக கோப்பை அரங்கில் சிறந்த 'சேஸ்' செய்த 3வது அணியானது அமெரிக்கா. முதலிரண்டு இடத்தில் இங்கிலாந்து (230 ரன், எதிர்-தெ.ஆப்., 2016), தென் ஆப்ரிக்கா (206 ரன், எதிர்-வெ.இண்டீஸ், 2007) உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை