உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / இந்தியாவில் ஒலிம்பிக் * அனுராக் தாகூர் நம்பிக்கை

இந்தியாவில் ஒலிம்பிக் * அனுராக் தாகூர் நம்பிக்கை

புதுடில்லி: ''வரும் 2036ல் ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தியா தயாராக உள்ளது,'' என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்தார்.உலகின் பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டியை நடத்த செலவு அதிகம். கடந்த முறை டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு (2021), ஜப்பான் ரூ. 1 லட்சம் கோடி செலவிட்டது. இந்தியாவால் இவ்வளவு பெரிய தொகையை செலவிட முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.இது குறித்து அனுராக் தாகூர் கூறுகையில்,''கடந்த ஆண்டு இந்தியாவின் மூலதன செலவு ரூ. 10 லட்சம் கோடி. இந்த ஆண்டு ரூ. 11 லட்சம் கோடி. இதில் விளையாட்டு உட்கட்டமைப்புக்கு 5,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதை 20,000 கோடியாக உயர்த்தினால், சர்வதேச போட்டிகளை நடத்தலாம். 2030ல் யூத் ஒலிம்பிக், 2036ல் ஒலிம்பிக் போட்டியை ஆமதாபாத்தில் நடத்த விரும்புகிறோம். இதற்கு உரிமை கோருவதில் உறுதியாக உள்ளோம். அனைத்து விதத்திலும் தயாராக இருக்கிறோம். ஒலிம்பிக் போன்ற போட்டிகளை நடத்துவதால் மக்கள் பயனடைவர். 'கேலோ' இந்தியா மூலம், நாட்டில் விளையாட்டு கலாசாரத்தை உருவாக்கியுள்ளோம். வரும் பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா அதிக பதங்கங்களை வெல்லும்,''என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை