உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / இந்தியா ஹாட்ரிக் தங்கம் * உலக வில்வித்தையில் அபாரம்

இந்தியா ஹாட்ரிக் தங்கம் * உலக வில்வித்தையில் அபாரம்

அன்டல்யா: உலக கோப்பை வில்வித்தை தொடரில் 'ஹாட்ரிக்' தங்கம் வென்றது இந்திய பெண்கள் அணி. துருக்கியில் உலக கோப்பை வில்வித்தை ('ஸ்டேஜ்-3') நடக்கிறது. பெண்கள் அணிகளுக்கான 'காம்பவுண்டு' பிரிவு பைனல் நேற்று நடந்தது. இந்தியாவின் ஜோதி, ஆதித்தி, பர்னீத் கவுர் இடம் பெற்ற அணி, எஸ்தோனியாவின் ஜாத்மா, மீரி பாஸ், டெட்ஸ்மான் அடங்கிய அணியை சந்தித்தது. முதல் செட்டில் (58-57) முந்திய இந்திய அணி, அடுத்த செட்டில் சமன் (57-57) செய்தது. கடைசி இரு செட்டிலும் (59-58, 58-57) முந்தியது. முடிவில் இந்திய அணி 232-229 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கம் கைப்பற்றியது. இந்த ஆண்டு சீனாவின் ஷாங்காயில் (ஏப்.,) நடந்த உலக தொடர் (('ஸ்டேஜ் 1') பைனலில் இந்தியா, துருக்கியை வென்றது. அடுத்து தென் கொரியாவின் இச்சானில் நடந்த தொடர் ('ஸ்டேஜ் 2'), பைனலில் இந்தியா, இத்தாலியை சாய்த்தது. தற்போது எஸ்தோனியாவை வீழ்த்திய இந்திய பெண்கள் அணி, உலக கோப்பை தொடரில், 'ஹாட்ரிக்' தங்கம் வசப்படுத்தியது. 13வது வெற்றிகடந்த 2023 கொலம்பிய தொடரில் ஜோதி, ஆதித்தி, பர்னீத் கவுர் இடம் பெற்ற அணி, வெண்கலம் வென்றது. இதன் பின் பங்கேற்ற 13 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று அசத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி