உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / குத்துச்சண்டை: நிகாத் ஜரின் வெற்றி

குத்துச்சண்டை: நிகாத் ஜரின் வெற்றி

அஸ்தானா: எலோர்டா கோப்பை குத்துச்சண்டை முதல் சுற்றில் இந்தியாவின் நிகாத் ஜரீன், அனாமிகா வெற்றி பெற்றனர்.கஜகஸ்தானில், எலோர்டா கோப்பை குத்துச்சண்டை தொடர் நடக்கிறது. பெண்களுக்கான 52 கிலோ பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் நிகாத் ஜரீன், கஜகஸ்தானின் ரகிம்பெர்டி ஜான்சயா மோதினர். நிகாத் ஜரீன் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.பெண்களுக்கான 50 கிலோ பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் அனாமிகா, கஜகஸ்தானின் ஜுமபயேவா ஆரைலிமை வென்றார். பெண்களுக்கான 48 கிலோ பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் மீனாக் ஷி 4-1 என கஜகஸ்தானின் காசிமோவா ரோக்சனாவை தோற்கடித்தார்.மற்ற பிரிவு முதல் சுற்று போட்டிகளில் இந்தியாவின் இஷ்மீத் சிங் (75 கிலோ), சோனியா (54 கிலோ) தோல்வியை தழுவினர்.ஆண்களுக்கான முதல் சுற்று போட்டியில் இன்று, இந்தியாவின் ஷிவா தபா (63.5 கிலோ), சஞ்சய் (80), கவுரவ் சவுகான் (+92) பங்கேற்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ